கேரளாவில் கல்பெட்டா சம்பவம் பரபரப்பு! - பாலியல் வன்கொடுமை வேதனை தாங்காமல் மாணவி தற்கொலை...!
Kalpetta incident Kerala sensation Unable bear pain harassement student committed suicide
கேரளா மாநிலத்தின் வயநாடு அருகிலுள்ள கல்பெட்டா பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சமீப காலமாக அவர் மனஅழுத்தத்தில் இருந்தது குடும்பத்தினரால் கவனிக்கப்பட்டது.
வழக்கத்திற்கு மாறாக அமைதியாகவும், மனச்சோர்வுடனும் காணப்பட்டதால், அவரது தந்தை அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறச் செய்தார்.

கவுன்சிலிங் நடைபெற்ற போது, தன்னை இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக மாணவி மருத்துவரிடமும் தந்தையிடமும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த தகவல் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் பள்ளி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அது காவலர்களிடம் சென்றது.
மேலும், காவலர்கள் நடத்திய விசாரணையில், உறவினர் ஒருவரும், பக்கத்து வீட்டில் வசிக்கும் மற்றொருவரும் மாணவியை பல்வேறு சமயங்களில் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தெரிவித்தார்.
2024–2025 காலகட்டத்தில் இந்த சம்பவங்கள் நடைபெற்றதாகவும் தெரியவந்தது. இதையடுத்து இருவரும் போக்சோ சட்டம் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்த மாணவி கடந்த இரு வாரங்களாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த சூழலில், அவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்த தகவலறிந்த காவலர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.மேலும் மனநல பாதிப்பு மற்றும் தொடர்ந்த மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்டமாக காவலர்கள் கருதினாலும், மரணத்திற்குப் பின்னால் வேறு காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
“இயற்கைக்கு மாறான மரணம்” என வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Kalpetta incident Kerala sensation Unable bear pain harassement student committed suicide