தேவயானி எவ்வளவு பெரிய நடிகை..மகளுக்காக மேடையில் வாய்ப்பு கேட்ட தேவயானி! இனியா ரொம்ப குடுத்து வச்சவங்க! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிய நடிகைகளில் ஒருவர் தேவயானி. கிளாமர் இல்லாமல் கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அவர், தற்போது தனது மகளின் இசைப் பயணத்திற்காக மேடையிலேயே வாய்ப்பு கேட்டிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அஜித்துடன் நடித்த காதல் கோட்டை திரைப்படம் தேவயானிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து சூர்யவம்சம், ப்ரெண்ட்ஸ், நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட பல வெற்றிப்படங்கள் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் நடித்த அவர், கிளாமர் காட்டாமல் வெற்றி பெற்ற நடிகைகளில் ஒருவராக பாராட்டப்பட்டார்.

பீக்கில் இருந்தபோதே இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து, எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் இளைய மகள் இனியா, இசையில் அதிக ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று தனது குரல் வளத்தை வெளிப்படுத்தினார். டைட்டிலை வெல்லாதபோதிலும், அவரது பாடல் திறமை பலரது பாராட்டைப் பெற்றது. குறிப்பாக இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோர் அவரை பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் தேவயானி இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு விருது வழங்கினார். அப்போது பேசிய அவர், “முன்பு சாய் அபயங்கரின் பெற்றோருக்கு ரசிகர்களாக இருந்தோம்; இப்போது சாய்க்கு ரசிகர்களாக இருக்கிறோம். எனது மகள் இனியா உங்களின் தீவிர ரசிகை. உங்கள் இசையில் பாட வேண்டும் என்பது அவளின் ஆசை. வாய்ப்பு இருந்தால் அவளை அழைத்து பாட வையுங்கள்,” என்று திறந்த மேடையில் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த சாய் அபயங்கர், “கண்டிப்பாக மேடம்,” என உறுதியளித்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “எவ்வளவு பெரிய நடிகை என்ற ஈகோ இல்லாமல், மகளின் கனவுக்காக இவ்வளவு எளிமையாக வாய்ப்பு கேட்கிறார்” என்று ரசிகர்கள் தேவயானியை பாராட்டி வருகின்றனர்.

இனியா விரைவில் திரைத்துறையில் முன்னணி பின்னணி பாடகியாக உருவெடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What a great actress Devayani is Devayani asked for a chance on stage for her daughter Iniya you are so fucking cute


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->