பிளாஸ்டிக் டப்பா நீரை வாளியில் கலந்து பக்தர்கள் மீது தெளித்ததா...? மதுரை மீனாட்சி கோவில் குடமுழுக்கு சர்ச்சை குறித்து வானதி சீனிவாசன் கடும் கண்டனம்...!
Did they mix plastic can water bucket and spray it on devotees Vanathi Srinivasan strongly condemns Madurai Meenakshi Temple immersion controversy
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவின்போது, புனித நீர் எனக் கூறி பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்ட நீரை வாளியில் இருந்த நீருடன் கலந்து பக்தர்கள் மீது தெளித்ததாக தெரிவிக்கப்படும் சம்பவத்துக்கு முன்னாள் பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,"17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களும், பக்தர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த இந்த ஆன்மிக நிகழ்வு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற முக்கிய நிகழ்வாக அமைந்தது.

இத்தகைய சிறப்புமிக்க விழாவில், பக்தர்களின் உணர்வுகளையும் ஆன்மிக நம்பிக்கைகளையும் மதிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பக்தர்களை முறையாக வழிநடத்தாமல் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாகவும், இதனால் கூட்ட நெரிசல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பக்தர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இது விழா ஏற்பாடுகளில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்ற கேள்வியை எழுப்புகிறது.
மேலும், குடமுழுக்கு விழாவில் தங்கள் மீது புனித நீரின் ஒரு துளியாவது விழுந்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் காத்திருந்தனர்.அப்போது காவலர்கள் புனித நீர் எனக் கூறி, பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்ட நீரை வாளியில் இருந்த நீருடன் கலந்து பக்தர்கள் மீது தெளித்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் பக்தர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இத்தகைய புனித நிகழ்வில், ஒவ்வொரு ஏற்பாடும் பக்தர்களின் நம்பிக்கையையும் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், பக்தர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசித்து அருளைப் பெற வந்த பக்தர்களுக்கு போதிய வசதிகளும் மரியாதையும் வழங்கப்படவில்லை என்றும் வானதி சீனிவாசன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
நீண்ட நேரம் காத்திருப்பு, கூட்ட நெரிசல், முறையான வழிகாட்டுதல் இல்லாமை உள்ளிட்ட பிரச்சினைகளுடன், புனித நீர் தெளித்ததாக தெரிவிக்கப்படும் சம்பவமும் பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க குடமுழுக்கு விழாவில் பக்தர்களின் ஆன்மிக உணர்வுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தவெக அரசின் அலட்சியமான ஏற்பாடுகளும், பக்தர்களின் உணர்வுகளை மதிக்காத செயல்பாடுகளுமே அவர்களுக்கு பரிசாக கிடைத்துள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.இவ்வாறு தனது பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Did they mix plastic can water bucket and spray it on devotees Vanathi Srinivasan strongly condemns Madurai Meenakshi Temple immersion controversy