தி.மு.க.வின் அடுத்த கட்ட அரசியல் பிளான் ரெடி...! மாவட்டச் செயலாளர்களுக்கு நாளை அவசர ஆலோசனை...!
DMK next phase political plan ready Emergency consultation district secretaries tomorrow
திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள சூழலில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும், நாளை மாலை 6.30 மணிக்கு, மு.க. ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தின் போது, ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு, வீடு வீடாகச் சென்று மக்களை சந்திக்கும் பிரசாரத் திட்டங்கள் மற்றும் அமைப்புசார் ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெறவுள்ளன.
வருகிற தேர்தலை முன்னிட்டு கட்சியின் அடுத்த கட்ட அரசியல் வியூகங்களை முடிவு செய்யும் முக்கிய சந்திப்பாக இந்த கூட்டம் பார்க்கப்படுகிறது.
English Summary
DMK next phase political plan ready Emergency consultation district secretaries tomorrow