ஆந்திராவில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா...இதுவரை 32 பேருக்கு பாதிப்பு...! - பொதுமக்கள் பீதி...!
Corona gaining momentum again Andhra 32 people infected so far Public panic
ஆந்திராவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடப்பா மாவட்டத்தைத் தொடர்ந்து விசாகப்பட்டினம் மற்றும் ராஜமுந்திரி பகுதிகளிலும் புதிய தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சல், சளி மற்றும் இருமல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சளி மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.ஆய்வு முடிவுகளில், சிலருக்கு ஓமிக்ரான் ஆர்.எப்.5 வகை கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதேபோல், மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த 19 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, கொரோனா சிகிச்சைக்கான வார்டுகளை தயார் நிலையில் வைத்திருக்கவும், முகக்கவசங்கள், கிருமிநாசினிகள் மற்றும் தேவையான மருந்துகளை போதிய அளவில் இருப்பில் வைத்திருக்கவும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், விசாகப்பட்டினம் மற்றும் ராஜமுந்திரி பகுதிகளில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆந்திர மாநிலம் முழுவதும் இதுவரை 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஆந்திராவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Corona gaining momentum again Andhra 32 people infected so far Public panic