நாட்டின் அமைதியைச் சூறையாடப் பார்க்கிறது காங்கிரஸ்...! நயினார் நாகேந்திரன் வைத்த அதிரடி குற்றச்சாட்டு...சூடாகும் அரசியல் களம்...!
Congress trying destroy peace country Nayinar Nagendran shocking accusation
சென்னையில் தமிழக பா.ஜ.க.வினர் நடத்திய முற்றுகைப் போராட்டத்தால் அரசியல் களம் பரபரப்பானது. டெல்லியில் இளைஞர்களுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் மற்றும் ராகுல் காந்தி நடத்திய போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.சென்னை சத்தியமூர்த்தி பவனில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் நோக்கில் நடைபெற்ற போராட்டத்தில், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர்.

இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,“வினாத்தாள் முறைகேட்டைக் கண்டித்து போராடுவதாகக் கூறிக்கொண்டு, நாட்டின் ஒற்றுமையையும் பொது அமைதியையும் சீர்குலைக்க முயலும் சமூக விரோத சக்திகளுடன் காங்கிரஸ் கட்சி கைகோர்த்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ராகுல் காந்தியைக் கண்டித்து தமிழக பா.ஜ.க. சார்பில் இந்த முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.மாணவர்களின் நலன் சார்ந்த பிரச்சினைகளில் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து, களத்தில் இறங்கி தீர்வு காண முன்வரும் கட்சி பா.ஜ.க. மட்டுமே. நாட்டின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களின் எதிர்காலத்தை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் அளவுக்கு நாங்கள் ஒருபோதும் தாழ்ந்து செல்லவில்லை.
மாணவர்களின் போராட்டத்தை திசைதிருப்பி குழப்பத்திற்கும், கலவரத்திற்கும் வழிவகுக்கும் முயற்சிகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மாணவர் போராட்டங்களுக்குள் சமூக விரோத சக்திகள் ஊடுருவுவதை ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை ஆபத்தானது என்பதை உணர்த்தும் வகையிலேயே இன்றைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்று தங்களது ஆதரவை வெளிப்படுத்திய தமிழக பா.ஜ.க. மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்"என நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Congress trying destroy peace country Nayinar Nagendran shocking accusation