தமிழ்நாட்டில் அரசாவது... ஒண்ணாவது...? - தவெகவை உலுக்கும் கனிமொழி எம்.பி.யின் அதிரடி பதிவு..!
Will there be government Tamil Nadu or something Kanimozhi MP shocking post
தூத்துக்குடியில் இளைஞர் ஒருவர் காவல்துறை சித்திரவதைக்கு ஆளாகி உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கடும் வேதனையும், அதிருப்தியும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவலர்களின் சித்திரவதைக்கு ஆளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட பல அமைச்சர்களும், அதிகாரிகளும் திரைப்படம் பார்ப்பதற்காக விடுப்பில் சென்றுள்ள நிலையில், இன்று தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று செயல்படுகிறதா என்ற கேள்வியே எழுகிறது.
நாளை அனைவரும் பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்தக் காவல் மரணம் குறித்து வாய் திறந்து பேசுகிறார்களா என்பதைப் பார்ப்போம்" கனிமொழி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Will there be government Tamil Nadu or something Kanimozhi MP shocking post