எந்த அழுத்தத்தின் காரணமாக காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி வைத்தது? - தமிழிசை சௌந்தரராஜன்
Due to what pressure did DMK form alliance Congress Tamilisai Soundararajan
தமிழக முதலமைச்சர் நேற்று அதிமுகவை விமர்சித்ததுக்கு, இன்று தமிழிசை சௌந்தர்ராஜன் பதிலளித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
அதாவது,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்ததாவது, "பாஜக கூட்டணியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கே சிக்கல் வரும்.
இதனால் பாஜக கூட்டணிக்கு எடப்பாடி ஒத்துக்கொண்டுள்ளார். அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அதிமுகவை அடக்கி விட்டது பாஜக தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது பா.ஜ.க., அவர்களின் அடக்குமுறைக்கு எடப்பாடி பழனிசாமி பணிந்து விட்டார்" என்று தெரிவித்தார்.
தமிழிசை சௌந்தரராஜன்:
இந்த நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பதிலுரைத்த தமிழிசை சௌந்தரராஜன், "போராட்டங்கள் ஒருபக்கம் நடக்கிறது, ஆனால் முதலமைச்சர் பாராட்டு மழையில் நனைந்து கொண்டு இருக்கிறார்.
Pressure கொடுத்து கூட்டணி வைத்ததாக சொல்கிறார்கள், ஆனால் அதிமுக - பாஜக கூட்டணியானது Pleasure" என்று தெரிவித்தார்.மேலும், எந்த அழுத்தத்தின் காரணமாக காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி வைத்தது? என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தற்போது அரசியல் ஆர்வலர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
Due to what pressure did DMK form alliance Congress Tamilisai Soundararajan