காங்கிரஸ் கட்சியின் வரலாற்று தவறுகள் அனைத்திற்கும் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி: சீக்கிய மாணவனின் கேள்விக்கு ராகுல் காந்தி பதில்..!
Happy to take responsibility for all the historical mistakes of the Congress party Rahul Gandhi answer to the question of a Sikh student
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ,காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார். அப்போது அவர் பிரவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது அவர் அங்கு பேசுகையில், முந்தைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சிகளின் போது நிகழ்ந்த ஒவ்வொரு தவறுக்கும் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற சீக்கிய இளைஞர் ஒருவர், ராகுல் காந்தியிடம் 1984-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது ஆபரேஷன் புளுஸ்டாரின் கீழ் பொற்கோவிலுக்குள் ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியது. இந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் தவறுகளைப் பொறுத்தவரை, அவற்றில் பல நான் இல்லாத அதாவது அவர் பிறக்காத போது நடந்தன என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், காங்கிரஸ் கட்சி அதன் வரலாற்றில் இதுவரை செய்த தவறுகள் அனைத்திற்கும் பொறுப்பேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், 1980-களில் நடந்தது தவறு என்று நான் பகிரங்கமாகக் கூறியுள்ளேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். அத்துடன் அவர் பலமுறை பொற்கோவிலுக்குச் சென்றுள்ளதாகவும், சீக்கிய சமூகத்துடன் தனக்கு மிகவும் நல்ல உறவு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாஜக குறித்து சீக்கியர்களிடையே தான் பயத்தை உருவாக்குவதாக நீங்கள் சொன்னீர்கள். சீக்கியர்களை எதுவும் பயமுறுத்தும் என்று நான் நினைக்கவில்லை என்றும், மக்கள் தங்கள் மதத்தை வெளிப்படுத்துவதற்குச் சங்கடமாக இருக்கும் ஒரு இந்தியாவை நாம் விரும்புகிறோமா? என்று தானே வினவினேன் என்று அவர் அந்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
English Summary
Happy to take responsibility for all the historical mistakes of the Congress party Rahul Gandhi answer to the question of a Sikh student