மாணவர்ளுக்கு இலவச சைக்கிள்...எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்!
Free bicycles for studentsOpposition leader Shiva provided
வில்லியனூர் புனித லூர்து அன்னை அரசு உதவி பெறும் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவர்ளுக்கு இலவச சைக்கிள்களை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் வழங்கினார்.
புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை மூலம் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வில்லியனூர் தொகுதியில் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வில்லியனூர் புனித லூர்து அன்னை அரசு உதவி பெறும் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் இன்று காலை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா அவர்கள் கலந்துகொண்டு மாணவர்ளுக்கு சைக்கிள்களை வழங்கி, வாழ்த்தி பேசினார். முன்னதாக சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் புனித லூர்து அன்னை திருத்தல அருட்தந்தை ஆல்பர்ட், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆல்வின் அன்பரசு மற்றும் திமுக நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் செல்வநாதன், சிறுபான்மை பிரிவு மாநில அமைப்பாளர் ஹாலித், தொமுச தலைவர் அங்காளன், ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் காளி, இலக்கிய அணி துணை அமைப்பாளர் கலிமுல்லா, ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், தொகுதி துணை செயலாளர் அரிகிருஷ்ணன், தொகுதி செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், கிளை கழக நிர்வாகிகள் ரபீக், டோமினிக், செல்வநாயகம், சரவணன், மிலிட்டரி முருகன், அமலர் ஆசிரியர், ரகு, வெங்கடேசன், கமால் பாஷா, முருகேசன், சிராஜி, முத்து, ரகு, ராமஜெயம், பாலு, சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
English Summary
Free bicycles for studentsOpposition leader Shiva provided