வீடியோ! அஜித் தாயிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் ஸ்டாலின்!
Sivaganga custodial death CM Stalin Apology
திருபுவனம் அருகே கோயில் காவலாளி அஜித் குமார், போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கை தாமே முன்வந்து விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அஜித் குமாரின் மரணம் குறித்து போலீசாரின் மீதான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளதுடன், விசாரணை அதிகாரிகளும் மருத்துவ குழுவும் இணைந்து முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அஜித் குமாரின் தாயார் மற்றும் சகோதரரை இன்று நேரில் சந்தித்த திமுக அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அப்போது அமைச்சர், “அரசு தரப்பில் அனைத்து விதமான நிவாரண உதவிகளும் விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்படும்” என உறுதியளித்தார்.
மேலும் அப்போது முதல்வர் ஸ்டாலின் செல்போன் மூலம் அஜித் குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்டதுடன், நீதியை பெற்று தருவேன் என்றும் உறுதியளித்தார்.
English Summary
Sivaganga custodial death CM Stalin Apology