மத உணர்வுகளை புண்படுத்தி பேசியதாக புகார்: அண்ணாமலை உட்பட 03 பேர் மீது, மதுரை மாநகர போலீசார் வழக்குப்பதிவு..! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி மதுரை பாண்டிக்கோவில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு  நடைபெற்றது. இதனை முன்னிட்டு அறுபடை முருகன் கோவில்களின் மாதிரிகள் கண்காட்சியாக அமைக்கப்பட்டு, வழிபாடுகள் அங்கு நடந்து வந்தன. அங்கு நாள்தோறும் ஏராளமானவர்கள் வந்து தரிசித்து சென்றார்கள்.

அத்துடன், முருக பக்தர்கள் மாநாட்டு மேடை திருப்பரங்குன்றம் மலையை பின்னணியாக வைத்தும், அதில் முருகப்பெருமான் படத்துடன், அறுபடை வீடுகளின் கோபுரங்களும் இடம்பெறுவது போன்றும் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அண்ணாமலை மீது மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் பேசுதல் உள்ளிட்ட 04 பிரிவுகளின் கீழ் மதுரை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்பவர் புகார் அளித்ததன் பேரில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், இந்து முன்னணி நிர்வாகி செல்வகுமார் உட்பட 03 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த புகாரில் அடிப்படையில் மத ரீதியாக பேசி பகைமையை உருவாக்குதல், மத உணர்வுகளை புண்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai City Police register case against Annamalai and 3 others for hurting religious sentiments


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->