இன்று வெளியாகிறது ரெட்ட தல படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்.!!
retta thala movie first single update
'மான் கராத்தே' படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் திருக்குமரன் தற்போது இவர் அருண் விஜய் -யின் 'ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகியாக சித்தி இத்னானி நடித்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சாம். சி.எஸ் இசையமைக்கும் இந்தப் படத்தை பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்ற நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை இன்று மாலை 6.30 மணிக்கு படக்குழு அறிவித்துள்ளது.
English Summary
retta thala movie first single update