சுவையான வெந்திய பணியாரம் எப்படி செய்வது?
how to make venthiya paniyaram
தேவயான பொருட்கள்
புழுங்கல் அரிசி, வெந்தயம், உளுத்தம் பருப்பு, கேரட் துருவல், நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம், கடுகு, எண்ணெய், உப்பு.
செய்முறை:-
அரிசி, வெந்தயம், உளுத்தம் பருப்பு மூன்றையும் ஒன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து இஞ்சி, கேரட் துருவல், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கி அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும்.
மாவில் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அடுப்பில் ஒரு பணியார கல்லை வைத்து எண்ணெய் விட்டு தயாரித்து வைத்துள்ள மாவை ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான வெந்திய பணியாரம் தயார்.
English Summary
how to make venthiya paniyaram