புதிய சுவையில் கருப்பட்டி பொங்கல் - எப்படி செய்வது?
karupatti pongal receipe
தேவையான பொருட்கள்:-
பச்சரிசி, பாசிப்பருப்பு, கருப்பட்டி, நெய், ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி திராட்சை.
செய்முறை:-
பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை தேவையான தண்ணீர் சேர்த்து குழைய வேக விடவும். இதை அடுத்து ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியை தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்க விட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரிசி பருப்பு கலவை மற்றும் கருப்பட்டி கரைசல் சேர்த்து நன்கு கிளறி எடுக்கவும்.
தொடர்ந்து ஒரு வானலில் நெய் ஊற்றி காய்ச்சி அதனை தயார் செய்து வைத்துள்ள பொங்கலில் ஊற்றி, ஏலக்காய் தூள் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து பரிமாறினால் சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.