இஸ்ரேலுக்கு அழுத்தம்..அரபு நாடுகள் அவசர ஆலோசனை..அடுத்தது என்ன? - Seithipunal
Seithipunal


 இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும், எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்களை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசர உச்சி மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. 

கடந்த 2 ஆண்டுகளாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல்  போர் தொடுத்து வருகிறது. இந்த போரில்  குழந்தைகள், பெண்கள் உள்பட 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.பல கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன.தொடர்ந்து காசா பகுதியை  இஸ்ரேல் தாக்கிவருவதால் நிலைமை படும் மோசமாகியுள்ளது.இதையடுத்து போரை நிறுத்த பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், கடந்த வாரம் கத்தாரில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் , அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க  இஸ்லாமிய நாடுகளுடனான அவசர ஆலோசனை கூட்டத்துக்கு கத்தார் அழைப்பு விடுத்தது.

அதன்படி, நேற்று அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசர உச்சி மாநாடு கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றது. இதில் கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி, துருக்கி அதிபர் எர்டோகன், பாலஸ்தீன அதிபர் மக்மூத் அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது  பல்வேறு இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும், எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்களை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.மேலும் கூட்டத்தில்  காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியை தடுக்க இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் முடிவு செய்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pressure on Israel Arab countries in emergency consultation Whats next?


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->