கழிப்பறையில் பாம்புடன் சிக்கிய நடிகர் காளி வெங்கட் – பரபரப்பான அனுபவம் குறித்த பேச்சு...இணையத்தில் வைரல்! - Seithipunal
Seithipunal


பாம்பைப் பார்த்தாலே படையே நடுங்கும் என்ற சொற்றொடர் வெறும் உவமையல்ல, நிஜ வாழ்க்கையிலும் எப்போதும் பொருந்தும். விஷமில்லாத பாம்புகளைக் கூட பார்த்தாலே பலர் நடுங்கிப் போவார்கள். அப்படி பாம்புடன் நேருக்கு நேர் மோதிய பரபரப்பான அனுபவத்தை நடிகர் காளி வெங்கட் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சமீபத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான பாம் திரைப்படம் செப்டம்பர் 12 அன்று வெளியானது. இந்த படத்தின் பிரசார நிகழ்வில் கலந்துகொண்ட காளி வெங்கட், தனது வாழ்க்கையில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தை சிரிப்புடனும், பதட்டத்துடனும் விவரித்தார்.

அவரது பேச்சுப்படி, ஒருமுறை டீ குடித்த பின் இயற்கை உபாதை ஏற்பட்டதால், அருகில் இருந்த டாய்லெட்டை பயன்படுத்த நினைத்தார். தனது உதவியாளரை அனுப்பி “டாய்லெட் எப்படி இருக்கிறது” என்று விசாரித்தார். அதற்கு உதவியாளர், “டாய்லெட் நல்லா இருக்கு சார்… ஒரே ஒரு டைல்ஸ் மட்டும் உடைந்துருக்கு” என்று கூறியுள்ளார்.

காளி வெங்கட் பெரிதாக யோசிக்காமல் உள்ளே சென்றார். அப்போது கதவை மூடுவதில் சிக்கல் ஏற்பட்டதால், காலால் அழுத்தி கதவை மூடி விட்டார். ஆனால், அந்த கதவை மீண்டும் திறப்பதற்கு கைப்பிடி இல்லாதது அவருக்கு கவனிக்கப்படவில்லை.

இந்நிலையில், வேலை முடிந்து தண்ணீர் எடுக்க முயன்ற போது, உடைந்திருந்த டைல்ஸிலிருந்து திடீரென பாம்பு ஒன்று தலை நீட்டி “உஷ் உஷ்” எனக் கீச்சிட்டதாம். அந்த தருணத்தில் பயத்தில் நடுங்கி விட்டதாகக் கூறினார். கதவையும் திறக்க முடியாமல், உள்ளே பாம்பும் இருக்க, தப்பிக்க முடியாத சூழ்நிலையில் சில நொடிகள் சிக்கிக்கொண்டதாக அவர் பகிர்ந்தார்.பின்னர், கதவின் ஒரு முனையை பலமாக இழுத்து திறந்து, உயிர் பிழைத்துக் கொண்டதாக நிம்மதியுடன் சொன்னார்.

காளி வெங்கட் தனது “பாம்பு சிக்கல்” அனுபவத்தை விவரிக்கும் போது, அருகில் இருந்த நடிகர் அர்ஜுன் தாஸ் சிரிப்பை அடக்க முடியாமல், சிரித்துக்கொண்டே இருந்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Kali Venkat gets stuck with a snake in the toilet talks about the thrilling experience goes viral on the internet


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->