சென்னை வானகரத்தில் பயங்கரம்: அதிவேகமாக வந்த கார் சாலையில் இருந்தவர்கள் மீது மோதி விபத்து: 02 பேர் உயிரிழப்பு, 04 பேர் படுகாயம்..!
2 killed in car accident in Chennai Vanagaram
திருவள்ளூர் மாவட்டம் வானகரத்தில், அதிவேகமாக வந்த கார் சாலையில் இருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் 04 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரை வேகமாக ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற சீனிவாசன் என்பவரை, பொதுமக்கள் விரட்டிப் பிடித்து. தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து, பொதுமக்களுடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்ட சீனிவாசன், போலீசாருடன் செல்ல மறுத்ததோடு, ரகளையிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பகுதில் கூட்டம் கூடி போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் 02 காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய வேலப்பன்சாவடியை சேர்ந்த சாய் ஸ்ரீனிவாசன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, மதுரவாயல், ஆவடி போக்குவரத்து புலனாய்வு ஆகிய 02 காவல் நிலையங்களில் சாய் ஸ்ரீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இறப்பு ஏற்படும் வகையில் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
2 killed in car accident in Chennai Vanagaram