50 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்..பாஜக மாநில பொதுக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்!
50 places with drinking water purification units A resolution expressing gratitude at the BJP state general committee meeting
50 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முதல் கட்டமாக ரூ.120.56 கோடி ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் அனைத்து இல்லங்களிலும் குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட விநியோகிக்கப்படும் என்று பாஜக மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாஜக பொதுக்குழு கூட்டம் பழைய துறைமுக வளாகத்தில் மாநில தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது, இதில் மாநில தேர்தல் பொறுப்பாளர்களும், மத்திய அமைச்சர்களான மன்சுக் மாண்டவியா, அர்ஜுன் ராம்மெக்வால் , மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர்கள் நமசிவாயம், ஜான்குமார், செல்வகணபதி எம்.பி, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பாஜக மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.1. பாரத நாட்டில் துணை ஜனாதிபதியாக அதிக வாக்கு வித்தியாசத்தில் அனைவரின் நம்பிக்கையையும் பெற்று வெற்றி பெற்ற முன்னால் புதுவை தெலுங்கானா மகராஷ்டா ஆளுநர் தமிழகத்தினை சேர்ந்த சி.பி.ராதகிருஷ்ணன் அவர்களுக்கு பாரட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது.
2. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி ஐயா அவர்கள் GST சீர்திருத்தத்தை கொண்டு வந்து மிக்பபெரிய பொருளாதார மாற்றத்தை உருவாக்கி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் 4 அடுக்காக இருந்த GST வரி விகித்தை இரண்டு அடுக்காக குறைத்து உயிர் காக்கும் மருந்துகளுக்கு 0 சதவிகிதம், ஆயள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு. மற்றும் கல்வி, கல்விக்கான உபகரனங்கள் அனைத்திற்கும் 0 சதவிகிதம அறிவித்து. ஏழை எளிய மக்கள், சிறு குறு தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் இந்த நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய தீபாவளி பரிசாக வழங்கியுள்ளதற்கு இந்த பொதுக்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
3. கடந்த 40 ஆண்டுகளாக காரைக்கால் பேரளம் இடையே இரயில் இணைப்பு இல்லாமல் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளானார்கள், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு காரைக்கால் மக்களின் துயர் துடைக்க காரைக்கால் பேரளம் இடையே திருநள்ளாறு வழியாக 23.5 கிலோமீட்டருக்கு ரயில்பாதை அமைத்துகாரைக்கால் மக்களின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்து காரைக்கால் மற்றும் திருநள்ளாறு பொருளாதாரம் மற்றும் அனைத்து வகையிலும் முன்னேற்றம் அடைவதற்கு ஏதுவாக ரயில் இணைப்பு அளித்த நமது பாரத பிரதமர் மற்றும் இரயில்வே அமைச்சர் ஆகியேர்களுக்கு இந்த பொதுக்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
4. ராஜீவ் காந்தி சிலை முதல் இந்திரா காந்தி சிலை வரை மேம்பாலம் கட்டுவதற்கு மத்திய தரை வழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலமாக அனுமதி பெற வேண்டி ரூ.481.51 கோடி உத்தேச மதிப்பீடு செய்யப்பட்டு அது. இறுதி கட்ட அனுமதிக்காக உள்ளது. இதனை பாராட்டி இந்த பொதுக்குழு நன்றியை தெரிவித்துக கொள்கிறது
5. கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் முதல் முள்ளோடை வரை சாலை விரிவாக்கத்திற்கு மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. மரப்பாலம் முதல் அரியாங்குப்பம் வரை மேம்பாலத்திற்கும் அரியாங்குப்பம் முதல் முள்ளோடை வரை நான்கு வழி சாலையாக மேம்படுத்த ஆலோசகர் நியமிக்கப்படதற்கு இந்த பொதுக்குழு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
6. 30 படுக்கை வசதியுள்ள ஆயுஷ் மருத்துவமனை காரைக்காலில் கட்டுவதற்கு ரூ.10.50 கோடி வழங்கி ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு இந்த பொதுக்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
7. காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அமைச்சகத்திடம் இருந்து ரூ.76 கோடியும். நல்லவாடு. காலாப்பட்டு கிராமங்களில் மீன் பதப்படுத்தும் மற்றும் இதர வேலைகளுக்கு மத்திய அரசு ரூ.100ஒதுக்கப்பட்டு. உள்ளதற்காக அதற்கான இந்த பூர்வாங்க பொதுக்குழு துவக்கப்பட நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
8. மத்திய அரசாங்கம் 50 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முதல் கட்டமாக ரூ.120.56 கோடி ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் அனைத்து இல்லங்களிலும் குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட விநியோகிக்கப்படும். இதற்கு இந்த பொதுக்குழு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
9. அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் திட்டத்தின் கீழ் (ஜல் ஜீவன் மிஷன்) ரூபாய் 70.58 கோடி அள்ளித்தந்த பாரத் பிரதமரை இந்த பொதுக்குழு பாரட்டுகிறது.
10. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குமரகுருபள்ளம் பகுதியில் 216 அடுக்குமாடி (ஒவ்வொரு குடியிருப்பும் 10 தளங்கள் கொண்டது) குடியிருப்புகள் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு இம்மாதம் வழங்கப்பட உள்ளதற்கு இந்த பொதுக்குழு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
11. கடந்த ஆண்டு தேசிய கல்விக் கொள்கை புதுச்சேரி அமல்படுத்தப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் மாணவர்களுக்கு புத்தக சுமையை குறைப்பதுடன் அவர்கள் தேசிய அளவில் நடைபெறும் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள பேரூதவியாக உள்ளது. இதற்கு இந்த பொதுக்குழு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
12. RURBAN திட்டத்தின் கீழ் கிருமாம்பாக்கம் ஏரியை ரூ.6 கோடி செலவில் வருவதற்கு இந்த தெரிவித்துக்கொள்கிறது.13. திருநள்ளாறு கோவில் பகுதியில் ரூ.7.50 கோடியில் ஆன்மீகப் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு இந்த பொதுக்குழு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
14. வில்லியனூர் திருக்காஞ்சி ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் ரூ.5.50 கோடி செலவில் மேம்பாட்டு பணி நடைபெற்று வருகிறது மற்றும் ஸ்ரீ திருக்காமேஸ்வரர் ஆலய மேம்பாட்டு பணிக்காக 5.4.45 கோடி ஒதுக்கீடு இந்த பொதுக்குழு நன்றியை செய்யப்பட்டுள்ளதற்கு தெரிவித்துக்கொள்கிறது.
15. நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள விமான சேவைகள மத்திய அரசின் உடன் திட்டத்தின் கீழ் புதுச்சேரி-ஹைதராபாத், புதுச்சேரி-பெங்களுர் விமான சேவைகள் துவங்கப்பட்டுள்ளது. மேலும் விமான ஓடு பாதை நீடிப்பிற்கு (3.3 km நீளம்) தேவையான நிலம் ஆர்ஜிதம் செய்வதற்கு 5,450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு இந்த பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது. நன்றியை
16. விவசாயம் PM Kisan நிதியின் கீழ் 10270 விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக வருடம் ஒன்றிக்கு ரூபாய் 6000 வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த நிதியாண்டில் 5.36.26 கோடி புதுவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு இந்த பொதுக்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது..
17. பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் (பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா 17 மார்ச் 2025 வரை 11226 வீடுகள் கட்டிக்கொடுத்து மக்களின் இல்லங்களில்விளக்கேற்றி வைத்த பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு இந்த பொதுக்குழு மூலம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதற்கு இந்த பொதுக்குழு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது..
18. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசாங்கம் லட்சம் ரூபாயிலிருந்து 2.26 லட்சமாக உயர்த்த உள்ளது. அரசு 2.74 லட்சம் ரூபாயாக நமது புதுச்சேரி உயர்த்தி, புதுவை அரசும் பயனாளிகளுக்கு 2 அரசு வீடு கட்டுவதற்கான தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தியதற்கு இந்த பொதுக்குழு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது..
19. 1963ம் ஆண்டு நகர மற்றும் கிராம அமைப்பு துறை துவங்கப்பட்டதில் இருந்து இதுவரை விதமுறைகளை மீறி கட்டிடம் கட்டியவர்கள் வாழ்வில் இந்த புதுச்சேரி அரசாணது விளக்கேற்றி வைத்துள்ளது. ஒருமுறை தீர்வாக அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு அபராதத்துடன் அரசாணை முறையான அனுமதி அளிக்க பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த பொதுக்குழு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
20. ரூ.17.30 கோடியில் பிஆர்டிசிக்கு புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த பொதுக்குழு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது..
21. 1360 வறுமைக் கோட்டின் கீழ் உள்ள சிவப்பு ரேஷன் அட்டை பயனாளிகள் இலவச மருத்துவ சிகிச்சைகள் பெற்றிருக்கிறார்கள். இதற்கு இந்த பொதுக்குழு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது..22. ஏழை எளிய மக்களின் மருத்துவ செலவினை குறைக்கும் வகையில் புதுச்சேரியில் 33 மலிவு விலை மருந்தகங்கள் துவங்கி மருத்து துறையில் புரட்சி செய்த நமது பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த பொதுக்குழு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
23. புதுச்சேரி விழுப்புரம் இடைய 1013 கோடி மதிப்பீட்டில் 29 கிலோமீட்டர் உலகத்தரம் வாய்ந்த சாலை அமைத்து நாட்டு மக்களுக்கு அற்பணித்து பயண நேரத்தை வெகுவாக குறைத்த நமது பாரத பிரதமருக்கு இந்த பொதுக்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
24. புதுச்சேரி மரக்காணம் இடையே 46 கிலோ மீட்டருக்கு நான்கு வழி சாலை திட்டத்திற்கு 2157 கோடி ஒதுக்கிய மத்திய அரசுக்கு இந்த பொதுக்குழு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
25. ரூ.491 கோடி செலவில் அமைக்கப்பட்ட ஜிப்மர் காரைக்கால் வளாகத்தினை திறந்து வைத்து உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை அடித்தட்டு மக்களுக்கும் சென்றடைய செய்த நமது பாரத் பிரதமருக்கு இந்த பொதுக்குழு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.