காரசாரமான காளான் மிளகு வறுவல்..!!
how to make mushroom pepper fry
தேவையான பொருட்கள்:-
காளான், சின்ன வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், உப்பு, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, எண்ணெய்.
செய்முறை:-
முதலில் காளானை பொடி பொடியாக நறுக்கி வெந்நீரில் போட்டு நன்கு அலசி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை அடுத்து அடுப்பில் ஒரு வானலை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் வெங்காயம் போட்டு நன்கு வதக்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்க வேண்டும்.
பின்னர் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, மிளகுத்தூள், உப்பு, நறுக்கி வைத்துள்ள காளான் சேர்த்து தண்ணீர் ஊற்றி நல்ல ஒரு சேர கிளறி வானலை மூடி பத்து நிமிடம் வேகவைத்து இறக்கினால் காளான் மிளகு வறுவல் தயார்.
English Summary
how to make mushroom pepper fry