மூட்டு வலியை போக்கும் ஆட்டு எலும்பு சூப்.!!
how to make goat bone soup
தேவையான பொருட்கள்
ஆட்டு எலும்பு, வெங்காயம் மஞ்சள் தூள், சீரகம், மிளகு எண்ணெய் கிராம்பு பட்டை கறிவேப்பிலை உப்பு.
செய்முறை
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். மிளகை உடைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சீரகம் தண்ணீர் எலும்பு, வெங்காயம் மற்றும் இடித்து வைத்துள்ள மிளகு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்கு கொதித்து எலும்பில் உள்ள சாறு நீரில் இறங்கி எண்ணெய் போல் மிதக்கும் சமயத்தில் பாத்திரத்தை இறக்கி விடவும். இதை அடுத்து அடுப்பில் வானலை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து தயார் செய்து வைத்துள்ள எலும்பு நீரில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி சிறிது நேரம் மூடி வைத்து இறக்கினால் சூப்பு தயார்.
English Summary
how to make goat bone soup