உலகப் புத்தாக்கக் குறியீட்டில் இந்தியா எத்தனையாவது இடம்..? முதலிடத்தில் சுவிட்சர்லாந்து..! - Seithipunal
Seithipunal


உலகப் புத்தாக்கக் குறியீட்டில் உள்ள 139 பொருளாதார நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது நாடுகளின் புதுமைத் திறன்களின் அடிப்படையில் மதிப்பிடுகிறது.

புதுமையின் பல பரிமாண அம்சங்களைப், புதுமை உள்ளீடுகள் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு தரவரிசையில், சீனா முதல் முறையாக ஜெர்மனியை முதல் 10 இடங்களுக்குள் பின்னுக்குத் தள்ளியுள்ளது. 

இது சீனாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதன் விரைவான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளதோடு, அதைத் தொடர்ந்து ஸ்வீடன் மற்றும் அமெரிக்கா இடம்பிடித்துள்ளன.  கடந்த ஆண்டு 39-வது இடத்தில் இருந்த இந்தியா 38வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

2023 ஆம் ஆண்டில், சர்வதேச காப்புரிமை விண்ணப்பங்களில் சீனா கால் பங்கைக் கொண்டிருந்தது நிலையில், தற்போது மிகப்பெரிய பங்களிப்பாளராக உள்ளது. இது காப்புரிமைகளின் உரிமையால் பிரதிபலிக்கும் சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதார வலிமை மற்றும் தொழில்துறை நிபுணத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.

பொருளாதார நாடுகளின் பட்டியல் முதல் 10 பட்டியலில் உள்ள மற்ற நாடுகள் தென் கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன், பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் டென்மார்க் இடம் பெற்றுள்ளது. இந்த நாடுகள் அனைத்தும் GII மதிப்பீட்டின்படி புதுமைகளின் அடிப்படையில் அமெரிக்காவிற்குக் கீழேயும், சீனாவிற்கு (10-வது) மேலேயும் உள்ளன.

கணக்கெடுப்பின்படி, 2025-ஆம் ஆண்டில் புதுமை உள்ளீடுகளை விட புதுமை வெளியீடுகளில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.  உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, 37 குறைந்த நடுத்தர வருமானக் குழு பொருளாதாரங்களில் புதுமைகளின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How many places does India rank in the Global Innovation Index


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->