தீரன் பட பாணியில் நகைக்கடை மேலாளரை வழிமறித்து, 10 கிலோ தங்கம் கொள்ளை: திருச்சியில் துணிகரம்: ராஜஸ்தானின் முகாமிட்டுள்ள தமிக போலீசார்..!
10 kg gold stolen from jewellery shop manager in Samayapuram
சென்னை சௌகார்பேட்டை பகுதியில் இயங்கி வரும் பிரபல ஜூல்லரி கடையில் பணியாற்றி வரும் மேற்பர்வையாளர், விற்பனை பிரதிநிதி மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய மூன்று பேரூம் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லில் இருந்து 10 கிலோ தங்க அவரணத்துடன் திருச்சி வழியாக சென்னை நோக்கி காரில் வந்துள்ளனர்.
அவர்களின் கார் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் என்கிற இடத்தில் தேசிய நெடும்சாலையில் சென்றுள்ளது. அப்போது அந்த காரை மற்ற ஒரு காரில் பின்தொடர்ந்து வந்துள்ளது. அதில் இருந்து இறங்கி வந்த மர்ம நபர்கள் சிலர் மூன்று பேரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவியுள்ளனர். பின்னர்,அவர்களிடம் இருந்த 10 கிலோ தங்க அவரணத்தை கொள்ளை அடித்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் நான்கு தனிப்படைகள் அமைக்கபட்ட்டுள்ளது. இந்நிலையில், தற்போது 05 தாவதாக மேலுமொரு தனிப்படை அமைக்கபட்டு கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஜூல்லரி கடை பணியாளர்கள் காரை ஒட்டி வந்த ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் கொள்ளையர்கள் குறித்து போலீசாரிடம் சிலமுக்கிய தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தீரன் பட பாணியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் மூன்று தனிப்படை போலீசார் நேற்று இரவே ராஜஸ்தான், ஹைட்ராபாத், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர். தற்போது ராஜஸ்தான்னில் முகாமிட்டுள்ள தமிழக போலீசார் ராஜஸ்தான் மாநில போலீசார் உதவியுடன் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.
English Summary
10 kg gold stolen from jewellery shop manager in Samayapuram