போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் லட்ச கணக்கில் மோசடி: தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த தம்பதி 02 ஆண்டுகளுக்கு பின் கைது..!
Couple defrauded bank of lakhs using fake documents and lived a life of hiding arrested after 2 years
வங்கி ஒன்றில் போலி ஆவணங்களை கொடுத்து பல லட்சம் ஏமாற்றி 02 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுவாமிதாஸ் பாண்டியன் (வயது 62), இவரது மனைவி மேரி ஜாக்குலின் (59). இவர்கள் தனியாக தொழில் நிறுவனம் ஒன்றை தொடங்குவதாக கூறி 02 பிரபல வங்கிகளில் போலியான ஆவணங்களை கொடுத்து ரூ.20 லட்சத்து 75 ஆயிரம் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இது தொடர்பில் வங்கி அதிகாரிகள் சார்பில் போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

புகாரி பேரில் மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். வங்கியை மோசடி செய்து ஏமாற்றிய கணவன்-மனைவி ஆகிய இருவர் மீதும் எழும்பூர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஆனால், இவர்கள் இருவரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்டு உத்தரவை பிறப்பித்தது.
இந்நிலையில் 02 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த சுவாமிதாஸ் பாண்டின், மேரி ஜாக்குலின் ஆகிய 02 பேரை தனிப்படை அமைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
English Summary
Couple defrauded bank of lakhs using fake documents and lived a life of hiding arrested after 2 years