அனுமதி கிடைப்பதில் கால தாமதம்..பதவி ஏற்பு விழா குறித்து அமைச்சர் பதில்!
Delay in obtaining permission Ministers response regarding the appointment ceremony
மத்திய அரசின் அனுமதி கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுவதால் நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் பதவி ஏற்பு விழா தள்ளிப்போகிறது என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவராக இன்று கட்சி அலுவலகத்தில் ராமலிங்கம் பதவி ஏற்றார் அவருக்கு அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி, சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:மத்திய அரசு ஒப்புதல் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் நியமன எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர் பதவி ஏற்பு விழா கால தாமதம் ஏற்படுகிறது.

அமைச்சர் பதவியில் இருந்து சாய்.சரவணன் நீக்கம் செய்ததால் அவர் மன வருத்தத்தில் இருக்கிறார் ஆனால் அதிருப்தியில் இல்லை.தேர்தல் நேரத்தில் எந்தெந்த தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் போட்டியிடுவது என அப்போது பேசி முடிவு செய்யப்படும்.
முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளது என்று கூறினார்.
English Summary
Delay in obtaining permission Ministers response regarding the appointment ceremony