அஜித் இல்லத்திற்கு நேரில் சென்ற விஜய்!
Sivagangai AjithKumar youth dead TVK vijay
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திலுள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார், ஜூன் 27ஆம் தேதி ஒரு நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைக்கப்பட்டு, போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அன்றைய தினம், கோவிலுக்கு வந்த நிகிதா என்ற பெண்ணின் காரில் இருந்த 9½ பவுன் நகைகள் களவுபோனதைத் தொடர்ந்து, மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரத்தின் தலைமையிலான தனிப்படை, அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. அதன்பின் அவர் மரணம் அடைந்ததையடுத்து, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் எதிரொலித்த நிலையில், விசாரணை போலீசராக இருந்த ஆறு பேர் – சங்கரமணிகண்டன், ராஜா, பிரபு, ஆனந்த், கண்ணன், ராமச்சந்திரன் – சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அஜித்குமாரின் மரணத்தைத் தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தற்போது, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் சென்று அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
உடனிருந்த பொதுச் செயலாளர் ஆனந்துடன் சேர்ந்து, ரூ.2 லட்சம் நிதியுதவியும் வழங்கினார். “உரிய உதவி செய்யப்படும்” என உறுதியளித்ததாக அஜித்குமாரின் சகோதரர் தெரிவித்தார்.
English Summary
Sivagangai AjithKumar youth dead TVK vijay