'கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்: நடிகர்கள் போதைபொருள் பயன்படுத்துவது மிகவும் தவறான விஷயம்' நடிகை அம்பிகை..! - Seithipunal
Seithipunal


90-களில் இளைஞர்களின் கனவு கன்னியாக தமிழ் சினிமாவில் வளம் வந்தவர்களில் நடிகை அம்பிகாவும் ஒருவர். இவர் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு சம்பந்த விநாயகரை வழிபட்ட பின்னர் அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் சன்னதிகளில் வழிபாடு செய்தார். அதனை தொடர்ந்து அவருக்கு சிவாச்சாரியார்கள் கோவில் சார்பில் பிரசாதம் வழங்கினர். 

அதன் பின்னர் அங்கு நிருபர்கள் அவரிடம் பல கேள்விகளை கேட்டனர். அதற்கு நடிகை அம்பிகா கூறியதாவது: 

அவருக்கு கடந்த ஒரு வாரமாக அருணாசலேஸ்வரர் கோவிலின் பெயரும், படமும் அடிக்கடி தென்பட்டு வந்ததால் அருணாசலேஸ்வரரை தரிசிக்க வந்ததாகவும், சாமியை வழிபாடு செய்தது மனதிற்கு நிறைவாக உள்ளது என்று தெரிவித்தார். 

அத்துடன், அவருக்கு அரசியலுக்கு வரலாம் என்ற எண்ணம் உள்ளதாகவும்,  அரசியல் மூலமாக ஏதாவது 02 விஷயம் அல்லது 02 நபர்களுக்கு நல்லது செய்ய முடிந்தால் அதை பெருமையாக நினைப்பேன் என்றும் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு மூட நம்பிக்கைகள் கிடையாது என்றும், ஆனால், கடவுள் நம்பிக்கை உண்டு. தலைவிதிப்படி எது நடக்குமோ அது நல்லதாகவே நடக்கும் என்று தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து நிருபர்கள் அவரிடம் 'நடிகர்கள் போதை பொருள் வழக்கில் சிக்கி உள்ளார்களே' என்று கேள்வி கேட்டனர். அதற்கு அம்பிகா பதிலளித்ததாவது: 'போதை பொருள் உயிரை கெடுக்கும். நடிகர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதை பார்த்து மற்றவர்கள் அதனை பயன்படுத்துவார்கள். அதனால் நடிகர்கள் போதை பொருள் பயன்படுத்துவது மிகவும் தவறான விஷயம்' என்று குறிப்பிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actors using drugs is a very wrong thing says Actress Ambika


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->