மாமியாருக்கு மருமகள் கையால் கொள்ளி.. ஆந்திராவை நெகிழ வைத்த சம்பவம்! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் கோன சீமா மாவட்டம் சி.எச். குன்னே கிராமத்தைச் சேர்ந்த ஆதிலட்சுமி வாழ்க்கையில் பல துயரங்களை சந்தித்தவர். கணவர், மகன் இருவரும் முன்பே உயிரிழந்ததால், அவர் தனது மருமகள் ஸ்ரீதேவியுடனும், பேரன்–பேத்திகளுடனும் வசித்து வந்தார்.

மாமியாரைப் தனது தாயைப்போல் பார்த்துக் கொண்ட ஸ்ரீதேவி, அவரை சிறப்பாக கவனித்துவந்தார். ஆனால், சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத ஆதிலட்சுமி, நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு சொந்த உறவினர்கள் எவரும் இல்லாததால், இறுதி சடங்குகள் செய்வது குறித்து குழப்பம் நிலவியது.

இதனையடுத்து, மருமகள் ஸ்ரீதேவி கிராம மக்களிடம் உதவி கோரினார். அனைவரின் ஒத்துழைப்புடனும், மிக எளிமையாக மாமியாரின் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. உடல் இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டபோது, கிராம மக்கள் அனைவரும் துயரத்தில் மூழ்கினர்.

மாமியாருக்கு மருமகள் கையால் கொள்ளிவைக்கப்பட்டது; அந்த தருணம் அங்கு இருந்தோரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. பெரும்பாலும் மாமியாரும் மருமகளும் இடையே தகராறுகள் பேசப்படும் இக்காலத்தில், மனிதாபிமானத்தின் அர்த்தத்தை உணர்த்திய மருமகள் ஸ்ரீதேவியின் இந்த செயல் அனைவரின் மனதையும் நெகிழச்செய்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mother in law daughter in law Last Rites


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...


செய்திகள்



Seithipunal
--> -->