ஓலா, உபர்-க்கு சவால்: வந்துவிட்டது ‘பாரத் டாக்ஸி’!
Bharat Taxi The Game Changer in Ride Hailing
மத்தியக் கூட்டுறவுத் துறை அமைச்சகம் இன்று இந்தியப் போக்குவரத்துத் துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைத் தொடங்கியுள்ளது. ஓலா மற்றும் உபர் போன்ற தனியார் செயலிகளுக்குப் போட்டியாக, 'பாரத் டாக்ஸி' (Bharat Taxi) செயலியை மத்திய அமைச்சர் அமித் ஷா டெல்லியில் இன்று அறிமுகப்படுத்துகிறார்.
ஓட்டுநர்களுக்கு ஏன் இது லாபகரமானது?
ஜீரோ கமிஷன்: இந்தச் செயலி மூலம் ஓட்டுநர்கள் பெறும் தொகையில் எந்த கமிஷனும் பிடித்தம் செய்யப்படாது.
நிர்வாகக் கட்டணம்: ஒரு பயணத்திற்கு ₹30 முதல் ₹50 வரை கமிஷன் கட்டுவதற்குப் பதிலாக, நாளொன்றுக்கு வெறும் ₹30 பராமரிப்புக் கட்டணமாகச் செலுத்தினால் போதும்.
உரிமையாளர் அந்தஸ்து: ஓட்டுநர்கள் கமிஷன் அடிப்படையில் இல்லாமல், அவர்களே உரிமையாளர்களாகச் செயல்படுவார்கள்.
வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்:
குறைந்த கட்டணம்: தனியார் செயலிகளை விட 30% குறைவான கட்டணத்தில் பொதுமக்கள் பயணம் செய்யலாம்.
பல்வேறு சேவைகள்: பைக், ஆட்டோ மற்றும் கார்களை உள்ளூர், வெளியூர் மற்றும் ரவுண்ட் டிரிப் (Round Trip) வசதிகளுக்குப் பயன்படுத்தலாம்.
பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி:
உடனடி உதவி: பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய டெல்லி காவல்துறையுடன் இணைந்து 35 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பரிசோதனை வெற்றி: டெல்லி மற்றும் குஜராத்தில் நடந்த சோதனை ஓட்டத்தின் போது, நாளொன்றுக்குச் சராசரியாக 5,500 பயணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எதிர்காலத் திட்டம்: அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நகரங்களுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படும்.
ஏற்கனவே 1.4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் இதில் பதிவு செய்துள்ளனர். நீங்களும் இந்தச் செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
English Summary
Bharat Taxi The Game Changer in Ride Hailing