வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: உச்சநீதிமன்றம் செல்லும் திமுக! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) நவம்பர் 4 முதல் தொடங்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் பணிகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன.

ஆனால், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன. வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் இத்தகைய பணிகளை மேற்கொள்வது சிரமமானது என்றும், அவசரமாக செயல்படுத்துவது சரியல்ல என்றும் அவை வலியுறுத்தின.

இருப்பினும், தேர்தல் ஆணையம் அந்த கோரிக்கையை ஏற்காமல், திட்டமிட்டபடி திருத்தப் பணிகளை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் SIR பணிகள் தயாரிப்பில் உள்ளன.

இதற்கு எதிராக நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கை ஜனநாயகத்துக்கும் சட்டத்திற்கும் எதிரானது என குற்றம் சாட்டப்பட்டு, அதனை நிறுத்திவைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள், உண்மையான வாக்காளர்களின் பெயரை நீக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை இருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளியிட்டன. இதனால், திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தின் முக்கிய முடிவாக, SIR நடவடிக்கைக்கு எதிராக சட்ட ரீதியான போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Voters Delisting Sir Supreme Court DMK 


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...


செய்திகள்



Seithipunal
--> -->