எம்எல்ஏ வீடு திருமண வரவேற்புக்கு சென்ற குடும்பத்தினர்; லாரி மீது கார் மோதி விபத்து: சம்பவ இடத்திலேயே 04 பேர் பலி..! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் கார்லபாலத்தை சேர்ந்தவர்கள் பலராமராஜு (65), லட்சுமி  (60), காதிராஜு புஷ்பவதி (60), ஸ்ரீனிவாசராஜு (54). அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்களும், உறவினரும், பாபட்லா எம்எல்ஏவுமான நரேந்திரவர்மாவின் மகன் திருமணத்தையொட்டி நேற்றிரவு வரவேற்பு நிகழ்ச்சிக்கு காரில் சென்றுள்ளனர்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் குறித்த நால்வரும் மீண்டும் காரில் தங்களது ஊருக்கு புறப்பட்டு சென்ற நிலையில், இன்று அதிகாலை கார்லபாலம் மண்டலத்தில் உள்ள சத்யவதிபேட்டா அருகே கார் சென்ற போது அவ்வழியாக வந்த லாரி மீது கார் மோதி விபத்துள்ளாகியுள்ளது.  இதில் கார் நொறுங்கியதில், காரில் இருந்த பலராமராஜு, லட்சுமி, காதிராஜு புஷ்பவதி, ஸ்ரீனிவாசராஜு ஆகிய 04 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். பின்னர், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபட்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 people killed in car and lorry accident involving family attending wedding reception at MLAs house


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->