பீஹார் சட்டசபை தேர்தல்: பறக்கும் படை அதிரடி சோதனை; சிக்கிய ரூ.108 கோடி மதிப்பு பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்..!
Ahead of the Bihar Assembly elections the Flying Squad seized cash and goods worth Rs108 crores in a raid
பீஹார் சட்டசபை தேர்தல் நவம்பர் 06, 09-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, பறக்கும் படையினர் அம்மாநிலத்தில் அதிரடி சோதனை நடத்துகின்றனர்.அதன்படி,அங்கு பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்கள், மதுபானத்தின் மதிப்பு 108 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆளும் மற்றும் எதிர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதேநேரத்தில் வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள், பணம் உள்ளிட்டவையும் விநியோகிக்கப்படுகின்றன. இதனை தடுக்க தேர்தல் ஆணையகம் அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளது. இதற்கென 824 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. புகார் கிடைத்த அடுத்த 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பறக்கும் படையினர் இன்று வரை நடத்திய சோதனையில் ரூ.108 கோடி மதிப்புக்கு பணம், போதைப்பொருள், பரிசுப்பொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ரூ.9.62 கோடி ரொக்கம், 24.61 கோடி மதிப்பு போதை மருந்து, 5.8 கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள், ரூ.26 கோடி மதிப்பு இலவச பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகதெரிவித்துள்ளது. அத்துடன், தேர்தல் தொடர்பான பிரச்னைகளை தெரிவிக்க 1950 என்ற எண் மூலம் தகவல் மையத்தை தொடர்பு கொண்டு வாக்காளர்கள் தெரிவிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது.
English Summary
Ahead of the Bihar Assembly elections the Flying Squad seized cash and goods worth Rs108 crores in a raid