குடும்பத்தினரால் கொல்லப்பட்ட காதலர்கள் ...! கிணற்றில் வீசப்பட்ட உடல்கள் மீட்பு...! நடந்தது என்ன...? - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள கம்பாலா கிராமத்தைச் சேர்ந்தவர் சோனு ரபாரி (19). அதே பகுதியைச் சேர்ந்த நவீன் ரபாரி (21) என்ற இளைஞருடன் அவர் காதல் உறவில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.ஆனால் இந்த காதல் தொடர்புக்கு சோனுவின் தந்தை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னணியில், கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் சோனுவும் நவீனும் திடீரென காணாமல் போயினர். இவர்களின் மாயம் குறித்து குடும்பத்தினரும் காவலர்களும் தேடுதல் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், பின்னர் நடைபெற்ற விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. சோனுவின் குடும்பத்தினரே இந்த இருவரையும் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் நடைபெற்ற நாளில், சோனுவின் தந்தையும் அவரது உறவினரும் மோட்டார் சைக்கிளில் சோனுவையும் நவீனையும் ஆள் நடமாட்டமற்ற ஒரு தனியிடத்திற்கு அழைத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அங்கு இருவரையும் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த கொலையில் சோனுவின் தாய் மற்றும் சகோதரனுக்கும் தொடர்பு இருப்பதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் நடந்த குற்றத்தை மறைப்பதற்காக, இருவரின் உடல்களையும் அருகில் இருந்த கிணற்றில் தூக்கி வீசியுள்ளனர்.ஒரு மாதத்திற்கும் மேலாக இவர்களைத் தேடி வந்த நிலையில், காவலர்களின் தீவிர விசாரணையில் சோனுவின் தந்தை இறுதியில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து கிரேன் உதவியுடன் கிணற்றிலிருந்து இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன.இந்த சம்பவம் தொடர்பாக சோனுவின் தந்தை, அவரது தம்பி மற்றும் மற்றொரு உறவினர் ஆகியோரை காவலர்கள் கைது செய்து மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lovers Killed by Family Members Bodies Thrown into Well Recovered What Happened


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->