"என் முதல் காதலை பற்றி சொன்னால் தமிழ்நாடே அதிரும்!" - வனிதா விஜயகுமார் பேச்சு! - Seithipunal
Seithipunal


நடிகை வனிதா விஜயகுமார் தனது முதல் காதல் குறித்து அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "என் முதல் காதல் யார் என்பதை வெளியில் சொன்னால் தமிழ்நாடே அதிரும்" என்று அவர் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளான வனிதா விஜயகுமார், விஜய்யுடன் இணைந்து நடித்த சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு மாணிக்கம், ஹிட்லர் பிரதர்ஸ், தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பின்னர் சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகியிருந்த அவர், பல்வேறு சர்ச்சைகள், குடும்ப பிரச்சினைகள் மற்றும் விவாகரத்து விவகாரங்களால் அடிக்கடி செய்திகளில் இடம்பெற்றார்.

அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் மற்றும் குக்கு வித் கோமாளி போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அண்மையில் Mrs and Mr திரைப்படத்தை தயாரித்து நடித்த அவர், தற்போது லவ் ஓ லவ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது முதல் காதல் குறித்து பேசிய வனிதா, "என்னுடைய முதல் காதல் பற்றி இப்போது வெளிப்படையாகப் பேச முடியாது. என்னை முதலில் யார் காதலித்தார்கள் அல்லது நான் யாரை முதலில் காதலித்தேன் என்பதை வெளியில் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதிர்ந்துவிடும். அதனால் அதை ரகசியமாகவே வைத்திருக்க விரும்புகிறேன். அந்த ரகசியம் எனக்கும் சம்பந்தப்பட்ட அந்த நபருக்கும் மட்டுமே தெரியும்" என்று கூறினார்.

வனிதாவின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அவர் குறிப்பிட்ட முதல் காதலர் யார் என்ற கேள்வியை எழுப்பி ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பல்வேறு யூகங்களை முன்வைத்து விவாதித்து வருகின்றனர். எனினும், வனிதா எந்த நபரின் பெயரையும் குறிப்பிடாததால், அவரது இந்த கருத்து தற்போது முழுக்க முழுக்க ஊகங்களுக்கும் ஆர்வத்திற்கும் இடம் கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

If I were to speak about my first love the whole of Tamil Nadu would be shaken Vanitha Vijayakumar speaks out


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->