திமுக கூட்டணியா? பாஜகவில் இணைவதா? விஜய் பக்கம் போகலாமா? அடுத்தக்கட்ட அரசியல் முடிவில் குழப்பத்தில் ஜி.கே. வாசன்! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து (NDA) விலகியுள்ள தமிழ்மாநில காங்கிரஸ் (தமாகா) தலைவர் ஜி.கே. வாசன், தனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து தெளிவான முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் கட்சியின் செயற்குழுவைக் கூட்டிய ஜி.கே. வாசன், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால், கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு கட்சியின் அடுத்த அரசியல் திசை என்ன என்பது குறித்து நிர்வாகிகளிடம் தெளிவான விளக்கம் எதுவும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால், தமாகா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்களிடம் ஜி.கே. வாசன் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது பலரும், தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் இல்லாத சூழலில், தமாகாவுக்கு திமுக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்று கணிசமான இடங்களில் போட்டியிட்டால் கட்சியை மீண்டும் வலுப்படுத்த முடியும் என்றும் அவர்கள் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், “மாற்றத்தை விரும்பி மக்கள் தவெகவுக்கு வாக்களித்திருந்தாலும், ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே சில அதிருப்திகள் உருவாகியுள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் சட்டமன்றத் தேர்தலின் அதே ஆதரவு தவெகவுக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறி. எனவே, கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திமுக கூட்டணியை பரிசீலிக்கலாம்” என்று நிர்வாகிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், தமிழக பாஜக தரப்பிலிருந்தும் ஜி.கே. வாசனுக்கு புதிய அரசியல் வாய்ப்பு முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமாகாவை முழுமையாக பாஜகவுடன் இணைத்தால், தமிழக பாஜக தலைமைப் பொறுப்பு வழங்கப்படலாம் என்ற ஆலோசனை அவரிடம் தெரிவிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தமிழக பாஜக தலைமை மாற்றம் குறித்த பேச்சுகள் நிலவி வரும் நிலையில், தமாகா பாஜகவுடன் இணைந்தால் ஜி.கே. வாசனுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது.

ஒருபுறம் திமுக கூட்டணியில் இணையும் வாய்ப்பு, மறுபுறம் பாஜகவில் இணைந்து மாநிலத் தலைமைப் பொறுப்பைப் பெறும் வாய்ப்பு என இருவேறு அரசியல் பாதைகள் முன் நிற்பதால், அடுத்தக்கட்ட முடிவை எடுக்க முடியாமல் ஜி.கே. வாசன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது அடுத்த அறிவிப்பு, தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

An alliance with the DMK Joining the BJP Or aligning with Vijay GK Vasan is in a state of confusion regarding his next political move


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->