தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமா?அமித்ஷா கணக்கும், விஜய் மீதான சாஃப்ட் கார்னரும்! திமுக, அதிமுகவுக்கு செம அடி! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடையாத நிலையில், தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் மத்திய அரசுடனான உறவு குறித்து அரசியல் விமர்சகர் பிரியன் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், தேர்தல் நேரத்தில் தவெக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவது பெரிய சவாலாக இருக்கும் என்றார். குறிப்பாக, 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள், அண்ணன் சீர், தாய்மாமன் சீர் போன்ற திட்டங்கள் நிதி ரீதியாக சாத்தியமா என்ற கேள்வியை எழுப்பினார்.

பெண்களுக்கு அனைத்து பேருந்துகளிலும் இலவசப் பயணத் திட்டத்தை அமல்படுத்துவோம் என தவெக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், ஏற்கனவே இலவசப் பயணத் திட்டத்தால் போக்குவரத்துக் கழகங்களுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக அரசே கூறி வரும் சூழலில், மேலும் விரிவாக்கப்பட்ட இலவசப் பயணத் திட்டத்தை செயல்படுத்துவது கடினமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசுடனான உறவு தொடர்பாக பேசிய பிரியன், பாஜகவை கொள்கை ரீதியான எதிரியாகக் கூறி ஆட்சிக்கு வந்த தவெக, தற்போது மத்திய அரசுடன் மோதலைத் தவிர்த்து இணக்கமான அணுகுமுறையை கடைப்பிடித்து வருவதாகக் குறிப்பிட்டார். மாநிலத்திற்கு தேவையான நிதி மற்றும் திட்ட ஒப்புதல்களைப் பெற வேண்டிய அவசியம் இருப்பதால், மத்திய அரசுடன் நேரடி மோதலைத் தவிர்க்கும் நிலைப்பாட்டை விஜய் அரசு எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல், ஒற்றுமையான சிவில் சட்டம், கல்வி நிதிப் பங்கீடு, பரந்தூர் விமான நிலையத் திட்டம் போன்ற விவகாரங்களில் விஜய் அரசின் நிலைப்பாடே அதன் உண்மையான அரசியல் முகத்தை வெளிப்படுத்தும் என்றும் பிரியன் கருத்து தெரிவித்தார்.

அதேநேரத்தில், திமுக கூட்டணியில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் அதிமுகவின் உள்கட்சி சிக்கல்கள் ஆகியவை பாஜக பார்வையில் சாதகமாக அமைந்துள்ளதாகவும், அதனால் விஜய் அரசின் செயல்பாடுகளை பாஜக தற்போது “காத்திருந்து கவனிக்கும்” அணுகுமுறையில் பார்த்து வருவதாகவும் அவர் கூறினார்.

இறுதியாக, விஜய் அரசின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு இன்னும் சில மாதங்கள் அவகாசம் தேவைப்படுவதாகக் கூறிய பிரியன், “விஜய் அரசு எப்படி செயல்படுகிறது என்பதை அறிய குறைந்தது இன்னும் ஆறு மாதங்கள் காத்திருந்து பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Are the election promises feasible Amit Shah calculations and his soft corner for Vijay A massive blow to the DMK and AIADMK


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->