ஈரானில் பதற்றம் அதிகரிப்பு...! தொழிற்சாலை மீது தாக்குதல்...! - 15 தொழிலாளர்கள் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


ஈரான் நாட்டை எதிர்த்து அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய ராணுவ நடவடிக்கை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல் இன்று 16வது நாளை எட்டியுள்ள நிலையில் அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், நேற்று ஈரானின் இஸ்பஹான் நகரில் செயல்பட்டு வந்த ஒரு தொழிற்சாலை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

வெப்பமூட்டும் மற்றும் குளிரூட்டும் சாதனங்களை தயாரிக்கும் அந்த தொழிற்சாலை, ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நேரத்தில் திடீரென தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானின் பார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த தாக்குதலில் 15 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதற்கு முன்பு, ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமாக விளங்கும் கார்க் தீவு பகுதிக்கும் அமெரிக்கப் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த தாக்குதலில் அங்கிருந்த ராணுவ கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tensions Escalate Iran Attack Factory 15 Workers Dead


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->