குஜராத்தில் அதிர்ச்சி தகவல்...! 2.05 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு...! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் குழந்தைகளின் உடல்நல நிலையைப் பற்றி கவலைக்கிடமான தகவல் வெளிவந்துள்ளது. மாநிலத்தின் 20 மாவட்டங்களில் மொத்தம் சுமார் 2.05 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த மாநில அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனிஷா வக்கீல், 2026 ஜனவரி மாத நிலவரப்படி மாநிலத்தில் 1.69 லட்சம் குழந்தைகள் தங்களுடைய வயதுக்கு ஏற்ப இருக்க வேண்டிய உடல் எடையை விட குறைவாக உள்ளனர் என்று தெரிவித்தார்.

மேலும் 36,805 குழந்தைகள் மிகவும் கடுமையான உடல் எடை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் மாநிலம் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 2.05 லட்சமாக இருப்பது தெரியவந்துள்ளது.

மாவட்ட வாரியாக பார்க்கும்போது, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் அதிகபட்சமாக 20,762 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையை மாற்றுவதற்காக மாநில அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களையும் தீவிர நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking News from Gujarat 2point05 Lakh Children Affected by Malnutrition


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->