மடப்புரம் காவலாளி கொலை: தமிழ்த் திரைத்துறையில் இருந்து முதல் கண்டனக் குரல்!
thirupuvanam murder thaadi balaji condemn
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் பாதுகாவலராக பணியாற்றிய அஜித் குமார், திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டபோது மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக 5 போலீசார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் தாடி பாலாஜி, சமூக ஊடகங்களில் உருக்கமான காணொளி ஒன்றை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
“2 நாட்களாக மனசு மிகவும் வலிக்குது. கோவில் காவலர் அஜித் குமார் எந்த தவறும் செய்யவில்லை. தவறு செய்திருந்தாலும், சட்டப்படி தண்டனை கொடுப்பது தான் சரி.
கோவிலுக்கு வருகிறவர்கள் நம்பிக்கையோடு வருகிறார்கள். ஒரு வண்டி எப்படி பார்க்க் செய்யலன்னு சின்ன விஷயத்திலிருந்து இந்த பிரச்சனை எழுந்தது. அதற்காக இவரை சந்தேகத்தின் பெயரில் அடிக்க என்ன உரிமை உங்களுக்கு இருக்கு?
நான் ஒரு கேள்வி கேட்கிறேன் — இவர் தவறு செய்தாரா இல்லையா என்று உறுதி இல்லாமலே அடிப்பதா நீதிமன்றம்? காக்கி சட்டை போட்டது மனுஷர்களுக்கு பாதுகாப்புக்கு இல்லையா?
சாத்தான்குளம் போல இது ஒரு வேறு அதிர்ச்சி. சில போலீசாரால் அமைப்பே சிரமப்படுகின்றது.
மனிதாபிமானம் இல்லாம, ஒருவரை கொடுமைப்படுத்துவது எவ்வளவு தவறு என்று அரசு புரிந்து, இத்தகைய சம்பவங்களை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
போலீசாரை என்னோட மனதிலிருந்து கேட்டுக்கிறேன் – மனுஷங்களா நடந்துக்கோங்க… மிருகமா இல்ல!” எனத் தெரிவித்துள்ளார்.
Sivaganga custodial death youth dead
English Summary
thirupuvanam murder thaadi balaji condemn