"துடக்கம்" படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கும் மோகன்லால் மகள்..!
Mohanlal daughter to make her entry into cinema with the film Thudakkam
நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா. ஓவியரும், எழுத்தாளரும் ஆவார். இவர் கிரைன்ஸ் ஆப் ஸ்டார்டஸ்ட் (Grains of Stardust) என்ற புத்தகத்தை கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். அத்துடன், தாய்லாந்தின் முக்கிய தற்காப்பு கலை மீது அதிக ஆர்வம் கொண்டு, பயிற்சியும் மேற்கொண்டுள்ளார்.
தனது தந்தை மோகன்லால் மலையாள சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், நீண்ட காலமாக சினிமாவில் இருந்து விலகியிருந்தாலும் உலக கலைகளில் ஆர்வமிக்கவராக இருந்துள்ளார்.
இந்நிலையில் இவர் ஜூடு அந்தனி இயக்கும் "துடக்கம்" என்ற படத்தில் அறிமுகமாகவுள்ளார். ஆண்டனி பெரும்பாவூரின் ஆஷிர்வாத் சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இது ஆஷிர்வாத் சினிமாஸின் 37-வது படமாகும்.
இந்த "துடக்கம்" படத்தின் போஸ்டரை மோகன்லால சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். போஸ்டரில் விஸ்மயா மோகன்லாலின் "துடக்கம்" என உள்ளது. இதன்மூலம் நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கலாம் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர் கடந்த 2018- ஆம் ஆண்டு இவரது சகோதரர் பிரனவ் மோகன்லால், ஜீது ஜோசப் இயக்கிய ஆதி என்ன ஆக்ஷன் படம் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Mohanlal daughter to make her entry into cinema with the film Thudakkam