அடைவு தேர்வு குறித்த ஆய்வு கூட்டம்...! - 370 தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறிய அன்பில் மகேஷ் - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று காலை, திருவாரூரில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான-2025 ஆண்டுக்கான அடைவு தேர்வு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் மாவட்டத்திலுள்ள 370 தலைமை ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சவுந்தர்ராஜன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

அன்பில் மகேஷ்:

மேலும் கூட்டத்திற்கு பின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியர்களிடம் தெரிவித்ததாவது,"சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு, தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் எந்த பாடத்தில் திறன் குறைந்து இருக்கிறார்கள்? என்பதை ஆய்வு செய்து, அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை வைத்து மாவட்டம் முழுவதும் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில், 8-வது மாவட்டமாக திருவாரூரில் இன்று குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை நேரடியாக வரவழைத்து, அடுத்த முறை அவர்கள் சிறப்பாக உற்சாகத்துடன், ஊக்கத்துடன் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில அடைவு திறனாய்வு மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் பிராகரஸ் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கோட்டூர், கொரடாச்சேரி, நன்னிலம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும், முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் இதனை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது"என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Study meeting achievement test Anbil Mahesh gave advice to 370 head teachers


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->