விசாரணைக்கு ஆஜராக வேண்டும் - மாதம்பட்டி ரங்கராஜ்க்கு போலீஸ் சம்மன்.!!
police summan send to mathampatti rangaraj
சமீபத்தில் பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா திருமணம் செய்து கொண்டதாகக் கூறிய புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து, ஜாய் கிரிஸில்டா தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் திருமணம் ஆனதாகவும், அவருடைய குழந்தை தனது வயிற்றில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தன்னை ஏமாற்றியதாகக் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜாய் கிரிஸில்டா புகார் அளித்திருந்தார். அந்த புகார் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து இந்தப் புகார் தொடர்பான விசாரணைக்காக ஏற்கனவே ஜாய் கிரிசில்டா காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அவரிடம் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. இதற்கிடையே, இந்த வழக்கு நீலாங்கரை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இதன்படி வரும் 26-ந்தேதி மாதம்பட்டி ரங்கராஜ் நீலாங்கரை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
police summan send to mathampatti rangaraj