பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு உதவியவன் கைது..!
Pahalgam terrorist attack aide arrested
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி 26 சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானில் உள்ள அவர்களின் முகாம்கள் மீது ' ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் கீழ் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியத்தில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதனிடையே, பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் குறித்த புகைப்படங்களை வெளியிட்ட போலீசார் அவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படி கூறியிந்த நிலையில் அதிரடியாக கைது நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர். அதன்படி, தற்போது பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு உதவியதாக முகமது கட்டாரியா என்பவனை ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 'ஆப்பரேஷன் மகாதேவ்' நடவடிக்கையில் 03 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் ஆதாரங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் முகமது கட்டாரியா பயங்கரவாதிகளுக்கு உதவியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிகின்றனர்.
English Summary
Pahalgam terrorist attack aide arrested