கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Coimbatore Gang Rape Case Three Found Guilty by All Womens Court
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரங்கேறிய கொடூரமான கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், இன்று (மார்ச் 7, 2026) கோவை அனைத்து மகளிர் நீதிமன்றம் தனது முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
வழக்கின் பின்னணி:
பிருந்தாவன் நகரில் தனது நண்பருடன் காரில் பேசிக்கொண்டிருந்த 20 வயது கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று, மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. இதில் மாணவியின் நண்பரை அரிவாளால் தாக்கிவிட்டு இந்த அநீதியை அவர்கள் இழைத்தனர்.
புலனாய்வு மற்றும் விசாரணை:
குற்றவாளிகள்: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான சதீஷ் (எ) கருப்பசாமி, கார்த்தி (எ) காளீஸ்வரன் மற்றும் அவர்களது உறவினர் குணா (எ) தவசி.
நடவடிக்கை: பீளமேடு போலீசார் இவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். போலீசார் இவர்களைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
ஆதாரங்கள்: பாதிக்கப்பட்ட மாணவி, அவரது நண்பர் உட்பட 113 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. டிஎன்ஏ (DNA) பரிசோதனை மற்றும் தடய அறிவியல் அறிக்கைகள் உட்பட இரண்டு குற்றப்பத்திரிகைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
இன்றைய தீர்ப்பு:
நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. கோவை மத்திய சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட மூவரையும் குற்றவாளிகள் என நீதிபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்படுவாகவும் தீர்ப்பில் தெரிவித்துள்ளார் .
English Summary
Coimbatore Gang Rape Case Three Found Guilty by All Womens Court