"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்!": ஈரோட்டில் எடப்பாடியாரின் 2 நாள் சூறாவளிப் பிரசாரம்.
admk eps erode election campaign
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்துடன் மாநிலம் முழுவதும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 189 தொகுதிகளில் தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ள அவர், இன்று தனது 190-வது தொகுதியாக ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
அடுத்த 2 நாட்களுக்கான பிரசாரத் திட்டம்:
இன்று மாலை 4:30 அந்தியூர் (கந்தம்பாளையம்)
நாளை மாலை 4:00 பெருந்துறை (காஞ்சி கோவில் சாலை)
நாளை மாலை 5:30 பவானி (சேலம் - மேட்டூர் சாலை)
முக்கிய எதிர்பார்ப்புகள்:
மெகா கூட்டம்: பவானியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் கூட்டத்தில் 75,000-க்கும் மேற்பட்டோர் திரள்வார்கள் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்புகள்: ஒவ்வொரு கூட்டத்திலும் திமுக அரசைக் கடுமையாகச் சாடி வரும் எடப்பாடியார், ஈரோடு மாவட்டத் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் புதிய அதிரடி வாக்குறுதிகளை இன்று வெளியிடுவாரா என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வரவேற்பு: சேலம் எடப்பாடியிலிருந்து சாலை மார்க்கமாக வரும் அவருக்கு ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
English Summary
admk eps erode election campaign