'பெரிய பட்ஜெட் படங்கள் Revenue Share முறையில் மட்டுமே தயாரிக்கப்படும்'; முன்னணி நடிகர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் 'செக்'..?
The Tamil Film Producers Council has decided that big budget films will be produced exclusively under a revenue-sharing model
தமிழ் சினிமாவில் இனி எடுக்கப்படும் பெரிய பட்ஜெட் படங்கள் 'வருவாய் பகிர்வு' அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்படும் என தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது முன்னணி நடிகர்களுக்கு பெரிய 'செக்' என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் முதல் கூட்டம் நடைபெற்றது. தலைவர் ஜி.கே.எம் தமிழ்குமரன் தலைமையிலான இந்தக் கூட்டத்தில் பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ், முன்னாள் உறுப்பினர் எஸ்.ஏ.சந்திரசேகர், கலைப்புலி எஸ்.தாணு, மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்கள் இனி Revenue Share என்ற வருவாய் பகிர்வு முறையில் மட்டுமே தயாரிக்கப்படும் என்றும், இதை சினிமாத் துறையில் உள்ள அனைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மே 02 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், ஓடிடி தள பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என தலைவர் ஜி.கே.எம் தமிழ்குமரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திரையரங்குகளில் ஒரு நாளைக்கு 05 காட்சிகளை ஒளிபரப்ப புதிதாக பொறுப்பேற்க இருக்கும் அரசிடம் வலியுறுத்துவோம் என்றும் தமிழ்குமரன் அறிவித்துள்ளார்.
முன்னணி நடிகர்கள் ஒரு படத்திற்கு 150 கோடி ரூபாய் வரை ஊதியம் பேசுகின்றனர். இவ்வாறு படம் தொடங்கும் போதே ஒரு பெரும் தொகையை நடிகர்கள் பெற்றுவிடுவதால், படம் தோல்வியடைந்தால், தயாரிப்பாளர் மட்டுமே முழு பாதிப்பையும் ஏற்க வேண்டியுள்ளது.
ஆனாலு, புதிதாக கொண்டு வந்துள்ள இந்த கோரிக்கையை நடிகர்கள் குறிப்பாக உச்ச நடிகர்கள் ஏற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
English Summary
The Tamil Film Producers Council has decided that big budget films will be produced exclusively under a revenue-sharing model