பாலிவுட்டில் அதிர்ச்சி! அக்க்ஷய்குமார் மகளுக்கு நேர்ந்த விபரீதம்...பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் அதிரடி கைது...!
Akshay Kumar daughter tragedy Man involved harassment arrested
பாலிவுட்டின் பிரபல நடிகர் அக்சய்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மும்பை நகரிலுள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்ற சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு, இணைய உலகின் மறைமுக ஆபத்துகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார்.
அந்த நிகழ்வில் அவர், ஆன்லைன் சூழலில் தனது 13 வயது மகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவத்தை மனவேதனையுடன் பகிர்ந்தார்.

ஆன்லைன் கேம் மூலம் பழகிய ஒருவன், நட்பின் பெயரில் நெருங்கி பின்னர் அவளிடம் அசிங்கமான கோரிக்கைகளை முன்வைத்து நிர்வாண படங்களை அனுப்புமாறு கேட்டதாக அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் குடும்பத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், இணைய பாதுகாப்பின் அவசியத்தையும் வலியுறுத்தியது.
இந்த புகாரை தொடர்ந்து, மாநில சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு, அந்த குற்றவாளியை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
மேலும், அவர் இதேபோன்ற முறையில் பிற பெண்களையும் குறிவைத்து தொல்லை அளித்தாரா என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Akshay Kumar daughter tragedy Man involved harassment arrested