ஜூன் 28-ஆம் தேதி வெளிநாட்டு நிதியுதவி சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம்: திமுக எம்பி வில்சன் அறிவிப்பு..!
DMK MP Wilson announces a nationwide hunger strike on June 28 demanding the withdrawal of the Foreign Contribution Amendment Bill
மத்திய அரசு கொண்டுவந்த வெளிநாட்டு நிதியுதவி சட்டதிருத்த மசோதாவை திரும்பபெறக் கோரி வரும் ஜூன் 28-ஆம் தேதி நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என திமுக எம்பி வில்சன் தெரிவித்துள்ளார்.
இந்த வெளிநாட்டு நிதியுதவி திருத்தச்சட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தலைமையில் நேற்று இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதத்தலைவர்கள், சிவில் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மை சமூக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய எம்பி வில்சன் கூறியதாவது; வெளிநாட்டு நிதியுதவி சட்டதிருத்த மசோதா ஜனநாயகத்தின் அடித்தளத்தையே பாதிக்கும் அபாயம் கொண்டது. மேலும், இது தன்னார்வ அமைப்புகளின் சுயாட்சி மற்றும் செயல்பாட்டை கடுமையாக பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ஏழை, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகள் குறையக்கூடும். எனவே, சட்டதிருத்த மசோதாவை திரும்பபெற கோரி வரும் ஜூன் 28-ஆம் தேதி நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக திமுக எம்பி வில்சன் கருத்தரங்கில் பேசியுள்ளார்.
English Summary
DMK MP Wilson announces a nationwide hunger strike on June 28 demanding the withdrawal of the Foreign Contribution Amendment Bill