வறுமையின் கொடுமை; 18 மாத பெண் குழந்தையை கழிவுநீர் கால்வாயில் வீசிக் கொன்ற கொடூர தாய்..! - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தையை கழிவுநீர் கால்வாயில் வீசி பெற்ற தாயே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபரிதாபாத் அடுத்த தீரஜ் நகரில் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஒரு குழந்தை இறந்து கிடப்பதாக கடந்த 23-ஆம் தேதி அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அங்கு சென்ற  காவல்துறையினர், குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கிய நிலையில், அங்கிருந்த சி.சி.டி.வி.க்களை காவல்துறையினர் ஆய்வு செய்ததில் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அந்த வீடியோவில் அந்தப் பக்கமாக ஒரு பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றதும், பிறகு அவர் திரும்பி வரும்போது அப்பெண்ணின் கையில் குழந்தை இல்லாததும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி அவரைக் கண்டறிந்துள்ளனர். பிறகு அவரிடம் விசாரித்தபோது அது தனது குழந்தைதான் என்று என்று கூறியுள்ளார்.

காவல்துறையின் தீவிர விசாரணையில், பிகார் மாநிலம், மதுபானி பகுதியைச் சேர்ந்தவர்கள் நீலம் மற்றும் சஞ்சய். இவர்களுக்கு திருமணம் முடிந்து தற்போது ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் வசித்து வருகின்றனர். இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே, ஐந்து குழந்தைகள் உள்ள நிலையில், ஒன்றரை வருடத்திற்கு முன் ஆறாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

ஏற்கனவே, கடும் வறுமையில் இருந்து வரும் அக்குடும்பத்தினருக்கு ஆறாவதாக பெண் குழந்தை பிறந்ததால், அதனைக் கவனிக்க முடியாமலும், செலவு செய்ய முடியாமலும் இருந்துள்ளனர். இதன் காரணமாக இந்தக் கொடூரக் காரியத்தைச் செய்ததாக அப்பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In Haryana a cruel mother throws her 18 month old daughter into a sewage canal killing her


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->