ஆல் ஏரியாவிலும் ரிங்கு 'கிங்' ; சூப்பர் ஓவரில் லக்னோவை வீழ்த்தி திரில் வெற்றிப்பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ்..! - Seithipunal
Seithipunal


19 வது ஐபிஎல் தொடரின் 38-வது லீக் ஆட்டம், இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையில் லக்னோ ஏகானா மைதானத்தில் நடைபெறத்து. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் த்ரில் வெற்றி பெற்றது. 

இன்றைய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, லக்னோவின் மொசின் கான் (05 விக்கெட்டுகள் ) அசத்தலான பந்துவீச்சில், 93 ரன்களுக்கு 07 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், அணியின் துணை கேப்டன் ரிங்கு சிங் தனி ஆளாகப் போராடி 51 பந்துகளில் 83 ரன்கள் (07 பவுண்டரிகள், 05 சிக்ஸர்கள்) விளாசினார். குறிப்பாக கடைசி ஓவரில் அவர் அடித்த 04 சிக்ஸர்கள் மூலம், அணியின் ஸ்கோரை 20 ஓவர்களில் 155/7 என உயர்த்தினார்.

அதன்படி, 156 ரன்கள் என்ற இலகுவான இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு ரிஷப் பண்ட் (42) மற்றும் ஆயுஷ் பதோனி (24) என ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்கள் பெரிதாக சொகிக்கவில்லை. இருப்பினும், கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முகமது ஷமி கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை சமன் (155/8) செய்தார். இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை இந்த ஐபிஎல் தொடரில் முதல்முறையாக கடைபிடிக்கப்பட்டது.

அதன்படி, சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய லக்னோ அணிக்கு சுனில் நரைன் பந்து வீசினார். நரைனின் முதல் பந்துலேயே நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழந்தார். அடுத்து எய்டன் மார்க்ரம் ஆட்டமிழக்க, லக்னோ அணியால் வெறும் 01 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. வெறும் 02 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, ரிங்கு சிங் அடித்த பவுண்டரியின் மூலம் முதல் பந்திலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kolkata Knight Riders secure a thrilling victory by defeating Lucknow in the Super Over


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->